க்ரைம்

வீடியோ காலில் பதிவு செய்யப்பட்ட அந்தரங்க காட்சி.. 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை!

துரத்தி துரத்தி காதலித்து தொந்தரவு செய்து வந்துள்ளார்...

Muthu Lakshmi

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே தான் காதலித்த 9 ஆம் வகுப்பு மாணவியிடம் வீடியோ காலில் பேசும் போது, அவருக்கு தெரியாமல் பதிவு செய்த அந்தரங்க காட்சிகளை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டி பாலியல் வன்கொடுமை இளைஞரை போக்சோ வழக்கில் கைது செய்துள்ளது காவல்துறை.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த 26 வயது மீன்பிடி தொழிலாளி ஆரோக்கிய டிக்சோ. இவர் அதே பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவியை கடந்த ஒரு வருடமாக ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, பள்ளி மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நடன பயிற்சிக்கு சென்று வந்த போது ஆரோக்கிய டிக்சோ துரத்தி துரத்தி காதலித்து தொந்தரவு செய்து வந்துள்ளார். பின்னர் மாணவியும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் அடிக்கடி செல்போனில் வீடியோ காலில் பேசி வந்துள்ளனர். 

அந்த பள்ளி மாணவி வீடியோ காலில் பேசிய போது அவருக்கு தெரியாமல் பதிவு செய்யப்பட்ட அந்தரங்க காட்சிகளை வைத்து மிரட்டியுள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி தனது வீட்டிற்கு அழைத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் இளைஞர் ஆரோக்கிய டிக்சோ. மேலும் தொடர்ந்து தன்னுடன் தனிமையில் இருக்க மாணவியை கட்டாயப்படுத்தி வந்ததிற்கு மறுத்து வந்துள்ளார் மாணவி. ஆனால் ஆரோக்கிய டிக்சோ மீண்டும் போனில் பதிவு செய்யப்பட்ட அந்தரங்க காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவிடப் போவதாக மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.  செய்வதறியாது குழம்பிய மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பின்னர் மாணவி நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 

அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆரோக்கிய டிக்சோ மீது மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது மற்றும் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது குளச்சல் அனைத்து மகளிர் காவல்துறை. அதனையடுத்து ஆரோக்கிய டிக்சனை கைது செய்து சிறையிலடைத்தனர் காவல்துறையினர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்