க்ரைம்

பள்ளி சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம்..!! நண்பனே பைக்கில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து தெருவில் வீசி சென்ற பயங்கரம்!

Tamil Selvi Selvakumar

பள்ளி மாணவியை அதே பள்ளியில் படிக்கும் 12 வது வகுப்பு படிக்கும் மாணவர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ராஜாஸ்தானில் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தான் துங்கர்பூர் மாவட்டம் பிச்சிவாரா கிராமத்தில் வசித்து வரும் பள்ளி மாணவி ஒருவர், கடந்த 24-ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார்.

அப்போது உணவு இடைவேளைக்காக வெளியே வந்த சிறுமியை அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், திடீரென பைக்கில் வந்து  கடத்தி சென்றுள்ளான்.

பின்னர் கடத்தி சென்ற மாணவியை அருகே உள்ள வனப்பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம்  செய்து, வீட்டின் அருகே வீசி சென்றுள்ளான்.

இது குறித்து தகவலறிந்த போலீசார், கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து ரோட்டில் வீசி சென்ற வழக்கில் அதே பள்ளியில் 12 வது வகுப்பு படிக்கும் மாணவனை, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.