க்ரைம்

தண்ணீர் எடுக்க வந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது முதியவர்!! கன்னியாகுமரியில் பரபரப்பு

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது முதியவரை  போக்சோவில் கைது செய்த சம்பவம் கன்னியாகுமரியில் அரங்கேறியுள்ளது. 

Tamil Selvi Selvakumar

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை பகுதியை சேர்ந்த தம்பதி ஒருவர் திக்குறிச்சி கல்லுவிளை பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் என்பவரின் வீட்டு பக்கத்தில் புதிய வீடு கட்டுவதற்காக ஆயத்தப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுமியை அழைத்துக் கொண்டு பெற்றோர் புது வீடு கட்டும் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டிற்கு சென்று தண்ணீர் வாங்கி வருமாறு ஒரு பாட்டிலை கையில் கொடுத்து அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து தண்ணீர் வாங்க சென்ற சிறுமியிடம் இருந்து ரவிச்சந்திரன் பாட்டிலை வாங்கி தனது மருமகளிடம் தண்ணீர் பிடித்து வருமாறு அனுப்பி வைத்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட 70 வயதான கிழவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  

அப்போது சிறுமிக்கு வலி ஏற்பட்டு அழுதுகொண்டே தாயிடம் சென்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறுமியை உறவினர்கள் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.