fake passport arrest  
க்ரைம்

10 வருஷமா சட்டவிரோதமாக தங்கி இருந்த பங்களாதேஷ் இளைஞர்…! சிக்கியது எப்படி தெரியுமா!?

அவரிடமிருந்து போலியான கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, பங்களாதேஷ்....

மாலை முரசு செய்தி குழு

போலி பாஸ்போர்ட் மூலம் அபுதாபி தப்பி செல்ல முயன்ற போது கைது. சென்னை பன்னாட்டு விமான நிலைய குடியுரிமை அதிகாரி கடந்த 19 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 

அதில், அபுதாபி செல்லும் விமான பயணிகளின் ஆவணங்களை சோதனை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த உத்தம் உராவ், என்பவரின் ஆவணங்களை பரிசோதனை செய்தனர். அவர் வைத்திருந்த இந்திய பாஸ்போர்ட் போலியானது என்பதும், இவர் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், தெரியவந்ததால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் தெரிவித்துள்ளார்.நேற்று சென்னை காவல் ஆணையரகத்தில் உத்தம் உராவ் என்பவரை குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர். 

இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினர்.  போலீஸ் விசாரணையில் கைதானவர் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த உத்தம்குமார் (25), என்பதும், இவர் 2015ம் ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, மேற்கு வங்களாத்தில் வசித்துக் கொண்டு, உத்தம் ராவ் என்ற பெயரில் ஆதார் கார்டு, வாக்களார் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்து அதன்பேரில், போலியான பெயரில் இந்திய கடவுச்சீட்டு பெற்று, அபுதாபி  செல்ல முயன்றது தெரியவந்தது.

அவரிடமிருந்து போலியான கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, பங்களாதேஷ் அடையாள அட்டை  மற்றும் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட உத்தம் குமார் விசாரணைக்குப் பின்னர்  நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.