க்ரைம்

நள்ளிரவில் பேசிக்கொண்டிருந்த நண்பர்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. கொலைக்கு இது தான் காரணமா..?

சென்னையை அடுத்த ஆவடியில் முன்விரோதம் காரணமாக இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Suaif Arsath

ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓ.சி.எஃப் மைதானத்தில் நேற்றிரவு 12 மணியளவில் ஆவடி கௌரிபேட்டை மசூதி தெருவை சேர்ந்த மீன் வியாபாரி அசார் மற்றும் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுந்தர் ஆகியோர் சந்தித்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது மர்ம நபர்கள் சிலர் இருவரையும் சரமாரியாக அரிவாளாள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நிழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் ஆவடி பகுதியைச் சேர்ந்த ஜெகன் மற்றும் யாசின் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உதவி ஆணையர் அலுவலகம் அருகே கொலை நிகழ்த்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.