குரோம்பேட்டையில் தனியார் மருத்துவமனை ஒன்று ஏற்கனவே, இறந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி 10 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முடிச்சூரை சேர்ந்த செல்வகுமார் - ஷாலினி தம்பதியின் இரண்டு வயது குழந்தையான தேஜஸ்ரீக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையை 5 நாட்கள் அட்மிட் செய்ய வேண்டும் எனவும், அதற்காக 10 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர்.
ஆனால், மருத்துவமனையின் போக்கில் சந்தேகம் ஏற்பட்டதால் பெற்றோர் அரசு மருத்துவர்களை உதவிக்கு அழைத்த நிலையில், குழந்தை இறந்து விட்டதாக தனியார் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.