க்ரைம்

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காருக்கு தீவைப்பு...

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காருக்கு தீ வைத்த மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

தூத்துக்குடி | கோவில்பட்டி அருகே உள்ள  கயத்தாரைச் சேர்ந்தவர் அய்யாதுரை. இவர் விவசாயம் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவருடைய வீடு கடம்பூர் சாலையில் அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து அய்யாத்துரை குடும்பத்தினர் தீயை அணைத்துள்ளனர். இதில் கார் லேசான சேதம் அடைந்தது. இது குறித்து கயத்தாறு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

போலீசார் விரைந்து வந்து வீட்டில் இருந்த சிசிடி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் வந்து காருக்கு தீ வைக்கும் காட்சிகள் பதிவாகி இந்த தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களையும் அடித்து நொறுக்கி எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இச் சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காருக்கு தீ வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.