க்ரைம்

திடீரென தீப்பிடித்து எரிந்த சரக்கு லாரி...

பல்லடத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

Malaimurasu Seithigal TV

நாமக்கல் | பரமத்தி வேலூரை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் 40.இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான சரக்கு லாரியை இயக்கிக் கொண்டு நேற்று திருப்பூர் சென்று பொருட்களை இறக்கி வைத்து விட்டு பின்னர் பல்லடம் வழியே பொள்ளாச்சி செல்வதற்காக சென்றுள்ளார்.

பல்லடம் பொள்ளாச்சி உடுமலை சாலை பிரிவில் ரோட்டோரம் நேற்று மாலை சரக்கு லாரியை நிறுத்திவிட்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் ஓட்டுநர்கள் தங்குமரையில் இரவு தங்கியுள்ளார்.

இந்த நிலையில் இன்று மதியம் ரோட்டோரம் நின்று இருந்த அந்த சரக்கு லாரியின் பின்புறம் திடீரென தீப்பிடித்து மலமளவென ஏறிய தொடங்கியுள்ளது.

இதைக் கண்டு அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை ஒரு மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் காற்றின் வேகம் காரணமாக இந்த தீ விபத்தில் குமார் 10 லட்சம் மதிப்பிலான சரக்கு லாரியின் பின் பகுதி முற்றிலும் தீயில் எரிந்து சேதம் அடைந்து விட்டது. மின் கசிவு அல்லது வேறு ஏதேனும் காரணமாக என பல்வேறு கோணங்களில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மர்மமான முறையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.