க்ரைம்

போதையில் ஏற்பட்ட தகராறு… இரண்டு பேருக்கு கத்தி குத்து…

திரு வி க நகரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

சென்னை | திரு வி க நகர் ஜானகிராமன் நகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் 27 வயதான அருண்குமார். இவரது நண்பர் திருவிக நகர் தீட்டி தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான மணி.

இருவரும் நேற்று (28 பிப்ரவரி) இரவு எட்டு மணி அளவில் திருவிக நகர் தீட்டி தோட்டம் காய்கறி கடை முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் இவர்களை பார்த்து ஓரமாக நின்று பேசக்கூடாதா என கேட்டுள்ளனர்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதால் அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் ஒன்றரை அடி நீளம் உள்ள கத்தியுடன் வந்த அந்த நபர் அருண்குமாரையும் மணியையும் கத்தியால் வெட்டினார்.

இதில் அருண்குமாருக்கு வலது கை இடது கை உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயம் விழுந்தது மணிக்கு கணுக்காலில் வெட்டு காயம் விழுந்தது. இருவரும் பெரியார் நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து திரு வி க நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இவர்களை வெட்டிய நபர் பெரம்பூர் தீட்டித்தோட்டம் 1 வது தெருவை சேர்ந்த கிஷோர் குமார் 23 என்பதும் இவர் முழு மது போதையில் இருந்ததும் தெரிய வந்தது.

இதனை அடுத்து கிஷோர் குமாரை நேற்று இரவு கைது செய்த திருவிக நகர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.