க்ரைம்

கண்ணாடி பாட்டிலால் வயிற்றில் குத்திய போதை நண்பர்...!

Tamil Selvi Selvakumar

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மது போதையில் கண்ணாடி பாட்டிலை உடைத்து குத்தியதில் கட்டில் வியாபாரி படுகாயம் அடைந்தார்.

சிங்கம்புணரி உப்புச்செட்டியார் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் கட்டில் வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேங்கைப்பட்டி சாலையோரத்தில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திய போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, போதையில் உடன் இருந்தவர்கள் கண்ணாடி பாட்டிலை உடைத்து சரமாரியாக குத்தியதில் பாலகிருஷ்ணன் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.