man commited suicide 
க்ரைம்

“ரோட்டுல வச்சி சாதிப்பேரைச் சொல்லி ..” குழந்தைக்கும் விஷம் கொடுத்துட்டோம்..! நெஞ்சை உலுக்கும் குளிர்பான டீலரின் தற்கொலை வீடியோ!!

“திருட்டு பய..திருட்டு பய குடும்பம் என பேசியுள்ளார். இதனால் மனம் உடைந்த....

மாலை முரசு செய்தி குழு

தமிழ்ச்சமூகம் நாளுக்கு நாள் வன்முறைகளாலும், முறைகேடுகளாலும், மலிந்து வருகிறது. மனிதர்களிடம் கொஞ்சம் கூட ‘ஈவு, இரக்கம், சிறிதேனும் அறம் கூட இல்லையா!? என்ற கேள்விகளும் எழுகின்றன. மேலும், என்ன செய்தாலும் சாதி, பணம், ஆள் பலம் இவற்றை வைத்து தப்பிவிடலாம் என்ற போக்கும் பெருகி வருவதை பார்க்க முடிகிறது. அதே சமயத்தில் இதுபோன்று அறமற்ற மனிதர்களுக்கு எதிராக போராடும் மன நிலையும் பாதிக்கப்பட்ட தரப்பு மக்களுக்கு குலைந்து வருகிறது. ‘மரணம்’ எல்லா பிரச்சனைகளுக்கும் வடிகாலாக அமையும்  என நினைக்கின்றனர். ஆனால் அது முற்றிலும் வீண் தான். ஆனால் இவற்றால் வருங்கால சந்ததியினரும் பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் பெரும் சோகம். அப்படி நெஞ்சை உலுக்கும் சம்பவம்தான் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. 

இளையான்குடி அருகே குளிர்பான டீலர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கடன் வாங்கியவர் சாதியைச் சொல்லி, பொதுவெளியில் குடும்பத்தை அசிங்கமாக பேசியதால் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் டீலர் தூக்கு போட்டு இறந்த நிலையில், விஷம்  குடித்த மனைவி, மகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மேலும் இறப்பதற்கு முன் மனைவியுடன் சேர்ந்து வெளியிட்ட தற்கொலை வீடியோ பரவி வருகிறது. 

இளையான்குடி அருகே உள்ள பெரும்பச்சேரி சேர்ந்தவர் மணிகண்டன் (42). இவர் எமனேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவர் உடன் குளிர்பான டீலராக வேலை பார்த்து வந்தார். குளிர்பான விற்பனை செய்வதில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த பிரச்சனையால் பழனி மணிகண்டனிடம் பணம் வாங்கி உள்ளார்.

சில ஆண்டுகள் கழித்து  மணிகண்டன் பழனியிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் பழனி வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் இருந்ததோடு மணிகண்டனையும் அவர் குடும்பத்தையும் பொதுவெளியில் “திருட்டு பய..திருட்டு பய குடும்பம் என பேசியுள்ளார். இதனால் மனம் உடைந்த மணிகண்டன் இறப்பதற்கு முன்பு மனைவியோடு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் “இதுக்கு மேல எங்களால ஒண்ணுமே செய்ய முடியாது, அதனாலதான் இந்த முடிவுக்கே வந்தோம். நம்பித்தான் பணத்த கொடுத்தோம். இப்போ எங்ககிட்ட ஒண்ணுமே இல்ல… எவ்வளவோ வாட்டி கேட்டு பாத்தோம். ஆனா பொதுவெளியில எங்க குடும்பத்த அசிங்கமா பேசுறா.. சாதிய சொல்லி திட்டி ரொம்ப அசிங்கமா ஆயிடுச்சு.. போலீசுக்கும் லெட்டர் எழுதிட்டோம். குழந்தைக்கும் விஷம் கொடுத்துட்டோம். இத பாக்குறவங்க எங்களுக்கு நீதி கிடைக்க வழி பண்ணுங்க..” என பேசியுள்ளனர்.

மனைவி மற்றும் குழந்தைக்கு விஷத்தை கொடுத்து விட்டு மணிகண்டன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். எப்படியோ இதுகுறித்து அறிந்துகொண்ட அக்கம்பக்கத்தினர் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி, மகளை மீட்டு அருகே உள்ள பரமக்குடி மருத்துவமனையில் சேர்த்தனர். கொடுத்த பணத்தை வாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட மணிகண்டன் குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில் இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.