திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மகமாயி திருமணி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் வந்தவாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.