க்ரைம்

திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்த பள்ளி மாணவி!! வசமாக சிக்கிய கணித ஆசிரியர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே  பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கணித ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Selvi Selvakumar

ஒரத்தநாட்டில் செயல்பட்டு வரக்கூடிய தனியார்பள்ளியில் பரிதியப்பர்கோவிலை சேர்ந்த மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

தகவலறிந்து வந்த ஒரத்தநாடு காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், மாணவியின் வாட்ஸ் ஆப் பதிவு ஒன்று போலீஸ் வசம் சிக்கியது. அதில், தனது பள்ளியில் பணியாற்றும் கணித ஆசிரியர் சசிகுமார் என்பவர் சக மாணவிகள் முன்னிலையில் தரக்குறைவாக திட்டிய்தாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மாணவியின குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கணித ஆசிரியர் சசிக்குமாரை போலீசார் கைது செய்தனர்.