மனிதர்களின் வக்கிர மனநிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நெஞ்சை உலுக்கும் விதமாக தினம் தினம் அரங்கேறி வருகின்றன.
ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் இயலாமையை 65 முதியவர் பயன்படுத்திக்கொண்ட ஒரு மோசமான சம்பவம் தான் மதுரையில் அரங்கேறி உள்ளது. மதுரை அலங்காநல்லூர் அருகே ஆடுகள் மேய்க்க சென்ற மனநலம் சரியில்லாத பெண்ணை கர்ப்பம் ஆக்கிய 65 வயது முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மனநலம் சரியில்லாத 24 வயதுடைய பெண்மணி தினசரி மலை அடிவாரப் பகுதியில் உறவினர் ஒருவருடன் ஆடு மேய்த்து வருவது வழக்கம். இவர் அதே பகுதியில் வாழும் உடும்பன் என்ற ஆறுமுகம் (65)
திடீரென அந்த மனநலம் சரியில்லாத பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரின் பெற்றோர் அந்த பெண்ணை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக திடுக்கிடும் தகவலை மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிர்ந்துபோன பெண்ணின் பெற்றோர் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்
இதனைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில் அவரின் உறவினர் உடும்பன்தான் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்ந்து ஏமாற்றி பலமுறை உல்லாசமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
தங்களது உறவினர் என்று நம்பிக்கையுடன் ஆடுகள் மேய்க்க உடன் சென்ற மனநலம் சரியில்லாத பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாகிய காமக்கொடூரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.