க்ரைம்

மாமியாரின் துப்பாக்கியை வைத்து செல்பீ எடுக்க முயன்ற இளம்பெண் தவறுதலாக தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழப்பு...

தனது மாமியாரின் துப்பாக்கியை வைத்து மாடலாக செல்பீ எடுக்க முயன்ற இளம்பெண் தவறுதலாக தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹர்டா எனும் பகுதியில் 20 வயது இளம்பெண் ஒருவர் தனது மாமியாரின் துப்பாக்கியை வைத்து மாடலாக செல்பீ எடுக்க முயன்றுள்ளார். அப்போது தவறுதலாக தன்னை தானே அந்த பெண் சுட்டுக் கொன்றுள்ளார். இதனால் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து போலீசார் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், துப்பாக்கியுடன் அந்த பெண் உயிரிழப்பதற்கு முன்னதாக எடுத்த புகைப்படம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். ஆனால், உயிரிழந்த பெண்ணின் தந்தை வரதட்சணை மரணம் என புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.