க்ரைம்

வசமாக சிக்கிய கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்...!

கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் கைது...

Malaimurasu Seithigal TV

சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே மர்ம நபர் ஒருவர் கஞ்சா புகைத்து கொண்டு இருப்பதை பார்த்து  மதுவிலக்கு போலீசார் அவரிடம் சென்று விசாரித்தனர். அப்போது கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த நபர், பல்லாவரம் பகுதியை சேர்ந்த கூலி வேலை பார்த்து வரும் பிரேம் குமார் என்பதும் இவர் சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த ஷானு என்ற பெண்ணிடம் கஞ்சா வாங்கியதும் தெரியவந்துள்ளது. 

இந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் அந்தோணி சகாய பரத் தலைமையில், சென்னை அமைந்தகரை பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வரும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஷானு (34) என்ற பெண்ணை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட ஷானுவை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் குரோம்பேட்டை போலீசார் ஷானு மீது வழக்கு பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.