க்ரைம்

திருமண ஊர்வலத்தில் வீசப்பட்ட வெடிகுண்டால் தலை வெடித்து சிதறிய வாலிபர்!!

Tamil Selvi Selvakumar

திருமண ஊர்வலத்தில் வன்மம் காரணமாக வீசப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூரில் திருமண விழாவையொட்டி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியின்போது, இரு பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே அந்த வாக்குவாதம் முற்றி இறுதியில் மோதலாக முடிந்துள்ளது.

இந்நிலையில், நேற்று திருமணச் சடங்கு முடிந்து புதுமண தம்பதிகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஏற்கனவே மோதல் காரணமாக வன்மத்தில் இருக்கும் ஜிஷ்ணு என்பவரின் கும்பல் திருமண ஊர்வலத்தில் வெடிகுண்டு வீசியதாக கூறப்படுகிறது.

ஆனால் எதிர்பாராத விதமாக இந்த தாக்குதலில் வெடிகுண்டு வீடிய ஜிஷ்ணிவிற்கே தலையில் வெடிகுண்டு வெடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.