police raped young girl 
க்ரைம்

பைபாஸில் இளம்பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி… எந்த தாயும் பார்க்கக்கூடாத அவலம்..! போலீசார் செய்த கேவலச்செயல்..!

இந்த சம்பவம் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இளம் பெண்ணை ...

மாலை முரசு செய்தி குழு

திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு ஏந்தல் பைபாஸ் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ்ராஜ் ஆகியோர் நள்ளிரவில் அந்த வழியாக பழம் ஏற்றிக் கொண்டு வந்த டாட்டா ஏஸ் வாகனத்தை வழிமறித்து அதில் இருந்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் மற்றும் அவரது தாயார் ஆகியோரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கி உள்ளனர். 

பின்னர் அந்த பகுதியில் உள்ள தோப்பில் இளம்பெண்ணை அழைத்துச் சென்று காவலர்கள் சுந்தர் மட்டும் சுரேஷ்ராஜ் ஆகியோர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்கள். 

இளம்பெண்ணின் தாயார் கூச்சலிட்ட நிலையில் பொதுமக்கள் அங்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ சிகிச்சைக்காக இளம் பெண்ணை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு 108 வாகனம் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இளம் பெண்ணை கற்பழிப்பு செய்த சுந்தர் மற்றும் சுரேஷ்ராஜ் ஆகிய இரண்டு காவலர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிபதியின் முன்பாக ஆஜர் படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இரண்டு காவலர்களும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் தலைவி ஏ.எஸ்.குமரி பாலியல் வன்கொடுமை நிகழ்வை குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நேரில் விசாரணை மேற்கொள்ள திருவண்ணாமலைக்கு இன்று வந்திருந்தார்.

அப்போது பேட்டி அளித்த குமரி அந்த பெண் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், நான் அவர்களிடம் வீடியோ காலில் நேரில் உரையாற்றியதாகவும் அப்போது நடைபெற்ற அனைத்தையும் அந்த பெண் தன்னிடம் கூறினார் என்றும், இந்த சம்பவத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாகவும், அந்தப் பெண்ணிற்கு பாதுகாப்பு தேவையா மற்றும் பெண்ணுக்கு தேவையான நிவாரணம் குறித்தும், மேலும் இந்த சம்பவம் குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தான் இங்கு வந்துள்ளதாகவும்,

தவறு செய்த காவலர்கள் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தவறு செய்த காவலர்கள் மீது துறை ரீதியாக பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், வெறும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் பெற்று தர கூடிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இது போன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தவறு செய்த காவலர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், சட்ட ரீதியான நடவடிக்கையையும் மேற்கொள்ளப்படும் என்றும் தற்போது தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்காக சமூக நலத் துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் தற்போது குறைந்து உள்ளதாகவும் தமிழக மகளிர் ஆணைய தலைவி குமரி பேட்டி அளித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.