க்ரைம்

சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தைக் கூறி ஆபாசமாக புகைப்படம் எடுத்த வாலிபர்! மிரட்டல் விடுத்து பணம் பறித்த இளைஞர் போக்சோவில் கைது!!

சேலத்தில் காதலிப்பதாக கூறி, சிறுமியை ஆபாசமாக படம் எடுத்து பணம் பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Tamil Selvi Selvakumar

சேலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, கள்ளக்குறிச்சியை சேர்ந்த சசிகுமார் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்திக்கொண்ட சசிகுமார், சிறுமியை காதலிப்பதாக கூறி, அவரை ஆபாசமாக படம் பிடித்து, பணம் கேட்டு மிரட்டிவந்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை யாருக்கும் தெரியாமல் வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இந்த சம்பவத்தை அறிந்து கொண்ட சிறுமியின் பெற்றோர், அதுகுறித்து புகார் அளித்ததன் பேரில் போக்சோ உள்பட 6 பிரிவின் கீழ் அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.