க்ரைம்

கடனை திருப்பி செலுத்தாத நடிகை மதுவந்தியின் வீட்டிற்கு சீல்  

1.21 கோடி கடன் செலுத்ததால் ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தியின் வீட்டை வங்கி அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர்.  

Malaimurasu Seithigal TV

1.21 கோடி கடன் செலுத்ததால் ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தியின் வீட்டை வங்கி அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர்.

பிரபல திரைப்பட நடிகரான ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் மதுவந்தி. மதுவந்தி பாஜகவில் செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்துஜா லைலேண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கி ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2வது குறுக்கு தெருவில் ஒரு வீட்டை வாங்கியுள்ளார். 1.21 கோடி ரூபாய் கடனை மதுவந்தி  செலுத்த தவறியதாக கூறப்படுகிறது. இதனால் பைனான்ஸ் நிறுவனம் சார்பாக மெட்ரோ பாலிட்டன் அல்லிகுளம் நீதிமன்றத்தில் வீட்டை சீல் வைக்க ஆர்டர் பெற்றனர்.

அதனை தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவின் பேரில் தேனாம்பேட்டை உதவி ஆய்வாளர் ரத்தினகுமார், தேவராஜ் , வழக்கறிஞர் வினோத் ஆகியோர் மதுவந்தியின் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். அந்த வீட்டின் சாவியை பைனான்ஸ் நிறுவனத்தின் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏற்கனவே தனியார் பள்ளியில் சீட்டு வாங்கி தருவதாக மதுவந்தி மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக மதுவந்தியிடம் கேட்டபோது அதிகாரிகள் இன்ஸ்பென்ஷன் வந்ததாக தெரிவித்து மறுத்துள்ளார்.