க்ரைம்

பிரியாணி சாப்பிட ஆசையாய் போன இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூரம்...

நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் பிரியாணி சாப்பிட சென்ற இளைஞர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி ஒருவர் உயிருக்கு ஆபாத்தான நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Malaimurasu Seithigal TV

சென்னை | தாம்பரம் அடுத்த சேலையூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த்வர்கள் அன்புமணி (வயது-21) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் முனியப்பன் (வயது-21) செம்பாகம் உள்ள தனியார் துணிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டே டேட்டோ போடும் வேலையும் செய்து வந்துள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வார்கள். 

இந்தநிலையில் இருவரும் நேற்று நள்ளிரவு சுமார் 12- மணி அளவில் சென்னை டி.எம்.எஸ் அருகே உள்ள 24 மணிநேரம் இயங்கி வரும் பிரபல பிரியாணி கடைக்கு பிரியானி சாப்பிட இருசக்கர வாகனத்தில் சென்று பிரியானி சப்பிட்டுவிட்டு இருவரும் அதிவேகமாக வீட்டிற்க்கு சென்றுள்ளனர்.

அப்போது ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்ற போது நிலைதடுமாறி சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குளாகினர். இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் பின்னால் அமர்ந்து சென்ற முனியப்பன் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவறிந்த பரங்கிமலை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று முனியப்பன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவனனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாகனத்தை ஓட்டி சென்ற அன்புமணி பலத்த காயந்த்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பரங்கிமலை போக்குவரத்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் பிரியானி சாப்பிட சென்று வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.