ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அருள்மணி (45) சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் வார்டானாக பணியாற்றி வருகிறார். அதனால் எல்லா நேரமும் அங்கேயே தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இவரது கணவர் ராதாகிருஷ்ணன் (50)
திருவல்லிக்கேணியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
அருள்மணி மற்றும் இவரது கணவர் இருவருக்குமே சர்க்கரை நோய் இருப்பதால் இருவருமே சிறுதானிய உணவுகளை உண்ண துவங்கியுள்ளனர். . இந்நிலையில் நேற்று முன்தினம் கணவர் ராதாகிருஷ்ணன் அருள்மணியிடம் உணவு கேட்டுள்ளார்.
அப்போது அருள்மணி சாதம்தான் இருக்கிறது. என்று கூறியுள்ளார்.
எரிச்சலடைந்த ராதாகிருஷ்ணன் “எப்போதும் சாதம்தானா.. சிறுதானிய உணவு சமைக்க வேண்டியதுதானே,என கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன் அருள்மணியின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார் இதனால் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அருள்மணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையம் போலீசார் இந்த கொலை வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யும் நோக்கம் இல்லாமல் நடந்த சம்பவம் என்பதால் “கொலையாகாத மரணம்” என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிந்து ராதாகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.