க்ரைம்

முன்விரோதம்...அதிமுக பிரமுகருக்கு கத்திக்குத்து

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே அதிமுக ஒன்றிய செயலாளரை முன்விரோதம் காரணமாக, கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

Malaimurasu Seithigal TV

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்ப்டட்ட பித்தளைப்பட்டி ஊராட்சி தலைவராக இருப்பவர் மயில்சாமி. இவர் அதிமுகவின் ஆத்தூர் தொகுதி கிழக்கு ஒன்றிய செயலாளராகவும் உள்ளார்.

இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கு குடிதண்ணீர் கொடுப்பத்தில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இன்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் தோட்டத்திற்கு சென்ற மயில்சாமியை,முருகன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் மயில்சாமிக்கு கை மற்றும் முதுகுபகுதியில் பலமாக காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைகண்ட அங்கிருந்தவர்களை மயில்சாமியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய முருகனை வளைத்து பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதேபோல் ரத்த வெள்ளத்தில் கிடந்த மயில்சாமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.