க்ரைம்

மீண்டும் ஒரு லாக்-அப் மரணமா? சிபிசிஐடி-கைக்கு மாறிய மானாமதுரை விசாரணை கைதியின் வழக்கு..

காவல் மரணம் என சந்தேகிக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உரிய நீதி கிடைக்கும் வரை ஆகாஷின் உடலை...

மாலை முரசு செய்தி குழு

மானாமதுரையில் கடந்த 6-ம் தேதி அழகர் மற்றும் ஜெயகுமார் என்பவரை அரிவாளால் தாக்கிய வழக்கில் ஆகாஷ் டெலிசன் (26) என்ற இளைஞர் உட்பட 5 பேர் மானாமதுரை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில் இரண்டாவது நாளாக மதுரை to ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் தொடரும் போராட்டம். நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரண்டாவது நாளக தொடர்ந்து நடந்து வருகிறது. பள்ளி வாகனம் கல்லூரி வாகனம் ஆம்புலன்ஸ் பால் வாகனங்களுக்கு மட்டும் போராட்ட குழு அனுமதி.

மானாமதுரை சியோன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் , அழகர். இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர். இவர்களில் ஜெயபாண்டி கோழிக்கடையில் வேலை செய்து வருகிறார். அழகர் என்பவர் அருகில் உள்ள ஹோட்டலில் பணிபுரிகிறார். இவர்கள் இருவரும் பணி முடிந்து வீடு திரும்பி நள்ளிரவில் சியோன் நகர் சாலையின் ஓரம் நின்று  பேசிக் கொண்டிருந்துள்ள தாக கூறப்படுகிறது அச்சமயம் பைக்கில் வந்த 2 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை ஓட, ஓட விரட்டி வெட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ள நிலையில் அவர்களை ஓட, ஓட, விரட்டி வாளால் வீசும் அதிர்ச்சி சம்பவம் அடங்கிய புதிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் 

மேலும் கைது செய்யப்பட்ட ஆகாஷ் டெலிசன் மீது காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது மானாமதுரை காவல் நிலைய குற்ற எண்.Cr. No.93/2026 under Sections 324(2), 296(b), 118(1), 109(1), and 351(3) BNS (Attempt to Murder) வழக்கின் முதல் எதிரியான ஆகாஷ் மானாமதுரை காவல் நிலையத்தில் HS No. 517-23 - சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர்மீது இதற்கு முன்பு 3 NDPS வழக்குகள் மற்றும் தற்போது 1 கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.

இரண்டு வாலிபர்களை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் என்ற குற்றவாளி கடந்த 6ம் தேதி காவல்துறையிடம் இருந்து தப்பித்தபோது பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் கால் எலும்பு முறிந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து 7ம் தேதி பிற்பகலில் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார் ஆகாஷ்.  மார்ச் 8 ஆம் தேதி உயிரிழந்தாக போலீசார் தெரிவித்துள்ளனர். மூச்சுத் திணறலில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசார் தான் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டுள்ளது. இளைஞர் ஆகாஷின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதனால் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்ல பேருந்துகள் அனைத்தும் திருப்புவனத்தில் இருந்து சிவகங்கை, இளையான்குடி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்படும் வாகனங்கள் பார்த்திபனூரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு இயக்கப்படுகிறது இதனால் சுமார் 50 கிலோ மீட்டருக்கு தூரம் சுத்தி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் மற்ற பகுதியில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் பேருந்து பேருந்துகள் சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கு உள்ளே விடாமல் போராட்டம் செய்து வருகின்றனர். 

காவல் மரணம் என சந்தேகிக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உரிய நீதி கிடைக்கும் வரை ஆகாஷின் உடலை வாங்க மாட்டோம் என  மதுரை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருபுவனம் அஜித்குமார் காவல் மரண வழக்குப் போல இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.