க்ரைம்

என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை....!ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்...!

Malaimurasu Seithigal TV

மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசலுக்கு அருகில் வசிப்பவர் உமர் செரிஃப். இந்த நிலையில் அதிகாலை 3 மணிக்கு தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் அவரது இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு உமர் செரிஃப் மற்றும் அவருடைய மனைவி, இரண்டு மகன்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது அப்பகுதி மக்கள் இடையே மிகப் பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.