க்ரைம்

ரயில் பயணிகளிடம் கைவரிசை காட்டியவர் கைது...

வேலூர் மாவட்டத்தில் ரயில் பயணிகளிடம் கொள்ளையடித்த சித்தூரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Malaimurasu Seithigal TV

வேலூர் | காட்பாடி ரயில் நிலையத்தில் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 12 கோச்சில் பயணம் செய்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ப்ரீத்தி என்பவரது செல்போன் ஹேண்ட்பேக் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது.

இதனை அடுத்து காட்பாடி ரயில்வே இருப்பு பாதை போலீசாரிடம் புகார் அளித்ததின் பேரில் காட்பாடி ரயில் நிலைய நடை இரண்டில் பதுங்கி இருந்த ஆந்திர மாநிலம் சிற்றூரை சேர்ந்த ஹரிஷ் பாபு என்பவரை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து சுமார் 29 ஆயிரத்து ஐம்பது ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்து சத்துவாச்சாரி ஜே.எம் 4 நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.