க்ரைம்

ஆரூத்ரா கோல்டு நிறுவன மோசடி…! ஆர்.கே.சுரேஷ்க்கு லுக் அவுட் நோட்டீஸ் …!

Malaimurasu Seithigal TV

ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அமைந்தகரையில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் தலைமைச் செயலகம் உள்ளது. இது மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் அதன் கிiள நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பல லட்சம் மக்கள் முதலீடு செய்துள்ளனர்.  இந்நிலையில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீட்டாளர்களிடம் பெற்ற 2,438 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனை அடுத்து இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்களாக பணியாற்றி வந்த ராஜசேகர், உஷா, மற்றும் மைக்கேல் வெளிநாடுகளில் தலைமறைவாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிறுவனத்தின் இயக்குநர்களாக பணியாற்றி வந்த ஹரீஷ், மற்றும் மாலதி மற்றும் ஏஜெண்டுகளாக செயல்பட்ட ராஜா, அய்யப்பன் ,ரூசோ, ராஜசேகர் ஆகியோரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்த விசாரணையின் போது ரூசோ என்பவரிடம் கொடுத்துள்ள தகவலின் படி பாஜக நிர்வாகியும், நடிகரும் மற்றும் தயாரிப்பாளருமான ஆன ஆர்.கே.சுரேஷ்சிடம் இந்நிறுவனத்தில் கிடைத்த பணத்தைக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதனை அடுத்து ஆர்.கே.சுரேஷ் செல்போன் நம்பர் மற்றும் அவர் வந்து சென்ற சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்து வைத்துள்ளனர்.  இதுகுறித்து ஆர்.கே.சுரேஷ்சிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் லுக் அவுட் நோட்டீஸ் என அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.