க்ரைம்

கேரளாவில், தனியார் பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்து...

Malaimurasu Seithigal TV

கேரளா | திருவனந்தபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தனியார் பேருந்து மீது மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் தூக்கி வீசப்படும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா சாலையில் கல்லம்பலம் பகுதியில் உள்ள பக்கவாட்டு சாலையில் இருந்து வந்து கொண்டிருந்த ஆட்டோ பிரேக் திடீரென பழுதாகியததில் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மோதியது.

இதில் ஆட்டோ ஓட்டுனர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.