pocso case 
க்ரைம்

“தின்பண்டம் வாங்கித்தரேன் வா..” 11 வயது சிறுமியை சீரழித்த ஆட்டோ டிரைவர்!!

சிறுமியின் தாயார் சிவகங்கையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ...

மாலை முரசு செய்தி குழு

தினம்தோறும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள். குடும்பம், வேலை பார்க்கும் இடம், பள்ளி, கல்லூரி, ஏன் சமயங்களில் கோவில்களுக்குள்ளும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. 

அதிலும் தற்போதெல்லாம் நடந்து செல்லும் பெண்களின் பாதுகாப்பே பெரும் கேள்விக்குறியாகியிருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் தினம்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. மேலும் குழந்தைகளை ஏமாற்றி அவர்கள் மீதான வன்கொடுமைகளை நிகழ்த்துவது மிக மோசமான வன்முறை ஆகும். அப்படி தினம்தோறும் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் சிவகங்கை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளையான்குடியை அடுத்துள்ள கொம்படி மதுரை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் 11 வயதான 6 -ஆம் வகுப்பு சிறுமி ஒருவரை தின்பண்டங்கள் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி தன் தாயிடம் இது பற்றி கூறிய நிலையில் சிறுமியின் தாயார் சிவகங்கையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அதனடிப்படையில் ஆட்டோ டிரைவர் கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். 

6 ஆம் வகுப்பு பயிலும் 11 வயது சிறுமியை ஆட்டோ டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.