Bank Reward points scam news Admin
க்ரைம்

தவறாக கையாளப்படும் வங்கிகளின் "ரிவார்ட் பாயிண்ட்ஸ்" - சிக்கினா என்ன ஆகும் தெரியுமா?

லூப் ஹோலை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பலர், ரிவார்ட் பாயிண்ட்ஸ்களை பெற்றுள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு தான் பிரபல நிறுவனம் ஒன்றின் உதவியுடன் ..

Anbarasan

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை சேர்ந்த பிரபல வங்கியில் ஒரு ஆச்சர்யமூட்டும் "ஸ்கேம்" நடந்தது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதாவது "வெகுமதி புள்ளிகள்" என்று அழைக்கப்படும் Reward Points பயன்பாட்டில் பெரிய முறைகேடு நடந்தது.

லூப் ஹோல்

எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும், அதன் இணையத்தில் உள்ள ஒரு சிறிய தொழில்நுட்ப கோளாறை பயன்படுத்தி தான் தவறுகள் எப்போதும் நடக்கிறது. அது போலத்தான், அந்த பிரபல வங்கியின் இணையத்தில் உள்ள ஒரு சிறிய லூப் ஹோலை பயன்படுத்தி ஒரு முறைகேடு நடந்துள்ளது. அதாவது வங்கி வழங்கும் ரிவார்ட் பாயிண்ட்ஸ்கள், அதற்கு சொந்தமில்லாதவர்களால் முறைகேடாக பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரிவார்ட் பாய்ண்ட்ஸ்

வங்கிகள் வழக்கமாக, வாடிக்கையாளர்கள் செய்யும் பரிவர்த்தனை அளவைப் பொறுத்து, வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு வெகுமதி புள்ளிகளை வரவு வைக்கின்றன. அவர்கள் செய்யும் பரிவர்த்தனை பெரியதாக இருந்தால், அந்த வெகுமதி புள்ளிகள் அதிகமாகும்.

அதே சமயம் ஒரு வாடிக்கையாளர் தான் செய்யும் பரிவர்த்தனையை ரத்து செய்தால் அது தொடர்புடைய பரிவர்த்தனையின் வெகுமதி புள்ளிகளும் திரும்பபெறப்படும்.

ரிவார்ட் பாய்ண்ட்ஸ் ஸ்கேம்

இப்படித்தான் கடந்த 2023ம் ஆண்டு அந்த பிரபல வங்கியின் வாடிக்கையாளர்கள், இணைய வாயிலாக விலை அதிகமாக உள்ள ஆர்டர்களை போட்டுள்ளனர். ஆனால் அதற்கான வெகுமதி புள்ளிகளை பெற்றபிறகு அவர்கள் போட்ட ஆடர்களை ரத்து செய்துள்ளனர். ஆனால் வழக்கத்துக்கு மாறாக ஆர்டர் ரத்து செய்யப்படும்போது வெகுமதி புள்ளிகளும் ரத்து செய்யப்படாமல், வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைத் தொகை அவர்களுக்கு திரும்ப சென்றுள்ளது.

கிட்டத்தட்ட ஓராண்டு இந்த லூப் ஹோலை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பலர், ரிவார்ட் பாயிண்ட்ஸ்களை பெற்றுள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு தான் பிரபல நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளது.

இப்படி செய்வது சரியா?

உண்மையில் வங்கியின் பக்கம் உள்ள சில தொழில்நுட்ப கோளாறுகள் தான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு பெரிய காரணமாக உள்ளது. இருப்பினும் இப்படி குறுக்கு வழிகளை பயன்படுத்துபவர்களை சட்டரீதியாக அணுக அந்த வங்கிக்கு முழு உரிமை உள்ளது. ஆகவே தேவையற்ற சட்ட சிக்கல்களில் சிக்குவதை தவிர்க்க, வாடிக்கையாளர்கள் எந்தவித குறுக்கு வழியையும் கடைபிடிக்காமல் இருப்பது நல்லது.