க்ரைம்

மருமகளுடன் தொடர்ந்து ஏற்பட்ட சண்டை... மனமுடைந்து தீக்குளித்த மாமியார்...

சென்னை அடுத்த மாங்காடு அருகே மாமியார் -மருமகள் சண்டையில் மாமியார்  தனக்கு தானே தீ வைத்து தற்கொலை கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

சென்னை அடுத்த மாங்காடு ஈவிபி அவென்யூ பாரதியார் தெரு சின்ன கொளத்தூவான்சேரியை சேர்ந்த கிரிஜா தனது மகன் ராகவேந்திரன் என்பவருடன் வசித்து வருகிறார்.  ராகவேந்திரனின் மனைவி அனுஷ்யா தேவிக்கும் கிரிஜாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை  நடந்திருக்கிறது.

நேற்று முன்தினம் இரவு சண்டை ஏற்பட்ட நிலையில் மனமுடைந்த கிரிஜா, மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டு, உடலில் தீப்பற்றியவாறு வீட்டைவிட்டு வெளியில் வந்து விழுந்துள்ளார்.

உடல் முழுதும் எரிந்த நிலையில் இருந்த அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கவே, இதுகுறித்து, மாங்காடு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, அங்கு வந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.