Bengaluru girlfriend murder case 
க்ரைம்

“அடிக்கடி தனிமையில் இருந்த காதலர்கள்” - அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டிய வாலிபர்.. சமாதானம் பேச அழைத்து கொலை!

இரவு 7.50 மணி அளவில் மூன்றாவது மாடியின் ஜன்னலில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்...

Mahalakshmi Somasundaram

கர்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் 26 வயதுடைய சந்தோஷ் குமார். இவர் அதே பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த 23 வயதுடைய ஐஸ்வர்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி வெளியூருக்கு சென்று வந்த நிலையில் இவர்களது காதல் குறித்து ஐஸ்வர்யாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

தொடக்கத்தில் காதலனுக்கு ஐஸ்வர்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாளடைவில் சம்மதம் தெரிவித்துள்ளனர். எனவே சந்தோஷ் குமார் அவர்களிடம் திருமணத்திற்கு மூன்று ஆண்டுகள் அவகாசம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சந்தோஷின் தந்தை உயிரிழந்த நிலையில் அவரது குடும்பம் சந்தோஷின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து சந்தோஷ் திருமணத்தை தள்ளி போட்டு வந்ததால் இருவருக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தோஷ் ஐஸ்வர்யாவுடன் தனிமையில் இருந்த போது எடுத்து அந்தரங்க புகைப்படங்களை வைத்து அவரை மிரட்டி வந்திருக்கிறார். தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று வந்த நிலையில் சமாதானம் பேசுவதற்காக சந்தோஷ் ஐஸ்வர்யாவை கடந்த (நவ 19) ஆம் தேதி அப்பிகெரே சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு மிரட்டி வரவழைத்துள்ளார். அங்கு இருவரும் தங்கியிருந்த நிலையில் இரவு 7.50 மணி அளவில் மூன்றாவது மாடியின் ஜன்னலில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து ஓட்டல் ஊழியர்கள் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் ஐஸ்வர்யாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சந்தோஷிடம் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து வாக்குமூலம் அளித்த சந்தோஷ் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய போது ஜன்னல் திறந்திருந்ததை கவனிக்காமல் கோபத்தில் தள்ளிவிட்டதாக கூறியுள்ளார். எனவே போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.