க்ரைம்

திருமணம் செய்துக்கொள்ள மறுத்த காதலி...! ஆத்திரத்தில் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட காதலன்...! - கைது

புதுச்சேரியில் திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலியின் அந்தரங்க புகைப்படங்களை அம்பலப்படுத்திய காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tamil Selvi Selvakumar

வில்லியனூரை அடுத்த பூஞ்சோலைக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை இழந்த அந்த பெண், ஜெயக்குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் அவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.

இந்த நிலையில், ஜெயக்குமார் அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததை அடுத்து ஆத்திரமடைந்த  ஜெயக்குமார் அந்த பெண்ணுடன்  தனிமையில் இருந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த  புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.