kalaibhavani and murugan  
க்ரைம்

“கள்ளக்காதலியை வீடு புகுந்து வெட்டிக் கொன்ற கொடூரம்” - தாயின் நிலையை பார்த்து அலறி துடித்த மகள்.. ஆசையாக கட்டிய வீட்டில் சிதறிய ரத்தம்!

பக்கத்தினர் வருவதையறிந்த முருகன் அங்கிருந்து பக்கத்து வீட்டு மாடிக்கு தாவிக் குதித்து தப்பிக்க முயன்றார்...

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மேல்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதுடைய ரஜினி, இவர் தி நகரில் பூ கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய கலைபவானி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 18 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ள நிலையில் வடக்கை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் சொந்த வீடு கட்ட நினைத்து திருவேற்காடு அருகில் உள்ள வீரராகவபுரம் பகுதியில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டி முடிவு செய்தனர்.

ரஜினிக்கு பூக்கடை வியாபாரம் இருந்த நிலையில் வீடு காட்டும் பணியை அவரது மனைவி கலைபவானி ஈடுபட்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த துணிகளை அயர்ன் செய்யும் கடை வைத்திருந்த 36 வயதுடைய முருகன் என்பவர் கட்டுமான பணியின் போது உதவியாக இருந்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. முருகனுக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கலைபவானி வீடு கட்டும் பணிக்கு இவர் பல வகைகளிலும் உதவி செய்து வந்த நிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதற்கிடையே வீடு கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு முன்பு புதுமனை புகுவிழா நடத்தி, கலைபாவனி குடும்பத்துடன் அந்த வீட்டிற்கு குடிவந்துள்ளனர். அதன் பின்னர் கலைபவானி, முருகனிடம் பேசுவதைக் குறைத்துள்ளார். மேலும் முருகனுடன் இருந்த தொடர்பையும் துண்டித்ததுடன் அவரை சந்திப்பதையும் தவிர்த்து வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் இது குறித்து அவருடன் சண்டை போட்டதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முருகன் கலைபவானி வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பிற்குள் சென்று யாருக்கும் தெரியாமல் கலைபாவனி வீட்டுக்குள் சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் கள்ளக்காதல் விவகாரம் குறித்து மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டதும் அவரது 15 வயது மகள் அறைக்குள் சென்று பயத்தில் கதவை சாத்திக் கொண்டார். பின்னர் ஆத்திரமடைந்த முருகன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கலைபவானியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வருவதையறிந்த முருகன் அங்கிருந்து பக்கத்து வீட்டு மாடிக்கு தாவிக் குதித்து தப்பிக்க முயன்றார்.

இதில் எதிர்பாராத விதமாக மாடியிலிருந்து தவறி விழுந்து முருகனின் இடுப்பு எலும்பு முறிந்தது. இதற்குள் அங்கு வந்த பொதுமக்கள் முருகனை சுற்றி வளைத்துப் பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார், முருகனை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த கலைபவானி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருவேற்காடு போலீசார் முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.