க்ரைம்

விமானத்தில் வந்து காதலியை குத்திக் கொன்ற காதலன்...

Malaimurasu Seithigal TV

சத்தீஸ்கரில், பேச மறுத்த காதலியை விமானத்தில் வந்து 51 முறை ஸ்குரூ டிரைவரால் குத்திக் கொலை செய்த காதலனை போலீசார் தேடி வருகின்றனர். கோர்பா மாவட்டம் ஜாஷ்பூரை சேர்ந்தவர் நீல் குஷம். இவருக்கு இணையதளம் மூலம் பஸ் கண்டெக்டர் ஷபாஷ் கான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், காதலனின் தொல்லை தாங்க முடியாமல், பேசுவதை துண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஷபாஷ் கான், குஜராத்தில் இருந்து சத்தீஸ்கருக்கு விமானத்தில் வந்து, நீல் குஷம் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனியாக இருந்த அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அருகில் இருந்த ஸ்குரூ டிரைவரை எடுத்து உடல் முழுவதும் 51 முறை குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளார். இதையடுத்து, ஷபாஷ் கானை பிடிப்பதற்கு 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.