Ex-husband arrested 
க்ரைம்

“அடங்காத காம இச்சையில் கணவன் செய்த செயல்” - கட்டிலில் மனைவி அனுபவித்த கொடுமை.. போதைப்பொருள் கொடுத்து சித்திரவதை!

ஒரு பெண் அலறும் சத்தத்தைக் கேட்ட பிறகு காவலர்கள் ஒரு படுக்கையறைக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைவது தெரிகிறது.

Vinvizhi Leninton

தனது முன்னாள் காதலியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து வாய் கட்டப்பட்டு படுக்கையில் கட்டப்பட்ட நிலையில் காவல்துறையினர் கண்டுபிடித்த காணொளி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பிரேசிலின், ஆகுவாஸ் லிண்டாஸ் டி கோயாஸ் நகரில் உள்ள ஒரு மோசமான நிலையில் உள்ள இல்லத்தில், 24 வயதான எமிலியானே தமாரா நூன்ஸ் கார்வாலோ ஐந்து நாட்களாகக் கட்டிலில் கட்டப்பட்டிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இராணுவக் காவல்துறையினரால் கண்டுபிகிக்ப்பட்டுள்ளார். அந்த திகிலூட்டும் காணொளியில், ஒரு பெண் அலறும் சத்தத்தைக் கேட்ட பிறகு காவலர்கள் ஒரு படுக்கையறைக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைவது தெரிகிறது. உள்ளே சென்றபோது, எமிலியானே கயிறுகள் மற்றும் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப்பட்டபோது, ​​முகத்தில் வாயு முகமூடியுடன் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்ததை காவலர்கள் கண்டதாக அந்தக் காணொளிக் காட்சி காட்டுகிறது.

செவிலியர் தொழில்நுட்ப வல்லுநரான எமிலியானே, தனது இரண்டு குழந்தைகள் குறித்து விவாதிப்பதற்காகத் தனது முன்னாள் கணவரான அய்ல்டன் ரோட்ரிக்ஸ் டி சௌசாவைச் சந்தித்துள்ளார். பின்னர் கடந்த ஆகஸ்ட் 17, திங்கட்கிழமை அன்று காணாமல் போனதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்குப் பதிலாக அவரது கணவர் எமிலியானேவை தாக்கி, ஒரு சிறிய பதுங்குமிடத்திற்குக் கொண்டு சென்று, அங்கு எமிலியானேவைப் பாலியல் வன்கொடுமை செய்து, கட்டிப்போட்டு கொடுமை செய்துள்ளார். பின்னர் ஆகஸ்ட் 21, வெள்ளிக்கிழமை அன்று எமிலியானே மீட்கப்படும் வரை அவருக்கு போதைப்பொருட்களைச் செலுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண் வாய் கட்டப்பட்ட நிலையிலும், கழுத்து மட்டுமின்றி அவரது கை, கால்கள் மற்றும் மேற்பகுதி கயிறுகள், கைவிலங்குகள், சங்கிலி ஆகியவற்றால் பிணைக்கப்பட்ட நிலையிலும் காணப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கான அறிகுறிகளும் இருந்தன,” என்று இராணுவக் காவல்துறை ஓர் அறிக்கையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரை கடத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட உணவு மற்றும் பிற ஆதாரங்களை பார்க்கும்போது, டி சௌசா எமிலியானேவை இன்னும் சில நாட்களுக்கு அங்கே வைத்திருக்கத் திட்டமிட்டுள்ளார் என்பதை உணர்த்தியதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,ம், டி சௌசா வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, ஆட்கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் சட்டவிரோத சிறைவைப்பு ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. மேலும், எமிலியானே கார்வால்ஹோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டடுள்ளார்.

ஐந்து ஆண்டுகள் ஒன்றாக இருந்த பிறகு, கார்வாலோ 2025 டிசம்பரில் டி சௌசாவுடனான தனது உறவை முறித்துக்கொண்டுள்ளார். அவர்கள் திருமணம் செய்துகொண்டபோது எமிலியானே மிகவும் சிறுவயதாக இருந்ததால், அது காதலா? அல்லது ஈர்ப்பா? என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்