க்ரைம்

கூலி தர தாமதமானதால், முதியவரை கொன்ற கொத்தனார்...

வியாசர்பாடியில் 73 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதியவரின் வீட்டில் வேலை செய்த கொத்தனார் கைது மூன்றாயிரம் ரூபாய் பணத்திற்காக கொலை நடந்தது அம்பலமாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

சென்னை | வியாசர்பாடியை சேர்ந்த முதியவர் பன்னீர்செல்வம் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முதியவரின் தலை மற்றும் கழுத்தில் காயங்களுடன் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வியாசர்பாடி போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தததில் ஆந்திராவை சேர்ந்த மஸ்தான் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் முதியவரின் வீட்டில் கொத்தனார் வேலை செய்யதற்கு பணத்தை தர தாமதமானதால் ஆத்திரமடைந்த மஸ்தான் முதியவரை கீழே தள்ளிவிட்டு கழுத்தைப் பிடித்துள்ளார்.

இதனால் முதியவர் இறந்து விட்டதாக மஸ்தான் வாக்குமூலம் அளித்துள்ளார்.