க்ரைம்

7 ஆண்களால் 8 முறை சீரழிக்கப்பட்ட பெண்! கணவனே மயக்கமருந்து கொடுத்து.. பாலியல் வன்கொடுமை! நேரலையில் ஒளிபரப்பிய அவலம்?

"விசாரணையில், மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்தது தொடர்பான குற்றச்சாட்டுகள்..."

Muthu Lakshmi

திருமண உறவை கொச்சை படுத்தும் அளவிற்கு கொடூரமான சம்பவம் ஒன்று இங்கிலாந்தில் அரங்கேறியுள்ளது. கணவனே தன் மனைவிக்குத் தெரியாமல் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, தெரியாத 7 ஆண்களால் அவளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூர செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றத்திற்கு கணவருக்கு சிறைத் தண்டனை கிடைத்துள்ள நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற ஆண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் தற்போது தனது அடையாளத்தை வெளிப்படுத்திப் பேசியுள்ளார்.

இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியைச் சேர்ந்தவர் லாரா பிஷப். இவரது கணவர் டேனியல் பிஷப். கடந்த 2021-ம் ஆண்டு லாராவிடம் ‘மது அருந்தலாமா’ என்று டேனியல் கூறியுள்ளார். இதனை நம்பிய லாராவும் அவருடன் மது அருந்தியுள்ளார். பின்னர் டேனியல் கொடுத்த ஜின் அண்ட் டானிகை அவர் குடித்துள்ளார்.

ஆனால், அதில் டேனியல் மயக்க மருந்து கலந்திருந்தது லாராவுக்கு தெரியவில்லை. குடித்த பிறகு என்ன நடந்தது என்பதும் அவருக்கு நினைவில் இல்லை என்று சொல்லப்படுகிறது. குடித்த சிறிது நேரத்திற்குப் பிறகு கண்விழித்தபோது, அவர் பேட்டில் ஆடையின்றி இருந்துள்ளார். மேலும், அடையாளம் தெரியாத ஒரு நபர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அந்த நேரத்தில் அறையின் வாசலில் தனது கணவர் டேனியல் நின்றுகொண்டிருப்பதையும் பார்த்துள்ளார். என்ன நடக்கிறது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்த லாரா, தன்னை அந்த நபர் கொலை செய்துவிடுவாரோ என்று பயந்துள்ளார். பின்னர் அவர் படுக்கையில் இருந்து பின்னோக்கி நகரத் தொடங்கியதும், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு காவல் நிலையத்தில் லாரா அளித்த புகாரின் அடிப்படையில், கணவர் டேனியல் பிஷப் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்தது தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்தன.

இதையடுத்து, 2022-ம் ஆண்டு டேனியல் பிஷப் மூன்று பாலியல் வன்கொடுமைகள், மூன்று பாலியல் வன்கொடுமை முயற்சிகள் மற்றும் போதை பொருளைப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு 14 ஆண்டுகளுக்கும் மேலான சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு 8 ஆண்டுகள் கண்காணிப்பின் கீழ் இருக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே, சிறையில் இருந்த தனது கணவரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், லாரா அதிர்ச்சியூட்டும் உண்மையைத் தெரிந்துகொண்டார். மொத்தம் 7 வெவ்வேறு ஆண்களால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவங்கள் 8 தனித்தனி நிகழ்வுகளாக நடந்துள்ளன. இதில் சில சம்பவங்கள் இரண்டு முறை நிகழ்ந்ததாகவும் டேனியல் தெரிவித்ததாக லாரா கூறியுள்ளார்.

மேலும், லாரா சுயநினைவின்றி இருந்தபோது நடந்த பாலியல் வன்கொடுமைகளை இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கில் தனது கணவருக்கு சிறைத் தண்டனை கிடைத்திருந்தாலும், தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய மற்ற ஆண்களுக்கும் உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், பல ஆண்டுகளாகத் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லாமல் இருந்த அவர், தற்போது முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார். கணவனே மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து, பல ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இந்தச் சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது அடையாளத்தையே வெளிப்படுத்தி லாரா போராடி வருகிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.