உத்தரபிரதேசம், முசாஃபர்நகரின் புதானா பகுதியில், சனிக்கிழமையன்று மீரட்டைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், தனது மனைவியின் கள்ளக்காதலரால் 'கள்ள உறவு' காரணமாக கோடரியால் 17 முறை தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'உடல் முழுவதும் ஆழமான வெட்டுக் காயங்களுடன்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாலிப் உயிரிழந்துள்ளார்.
மேலும், தாக்குதல் நடத்திய 25 வயது ஆசிம் என்பவரை ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு சிறிய மோதலுக்குப் பிறகு கைது செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது இருவருக்கும் வாக்குவாதத்திற்குப் பிறகு நடந்ததாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் ஆசிம் கூர்மையான விவசாயக் கோடரியால் தலிப் மீது சரமாரியாகத் தாக்குவதைக் காட்டும் அந்தப் பயங்கரத் தாக்குதல், அப்பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி கேமரா பதிவு செய்துள்ளது. உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, குஜராத்தைச் சேர்ந்த வெல்டரான தலிப். அவரது மனைவி அவரை ஒரு "அவசர" விஷயம் எனக் கூறி தனது மனைவி வேலையிலிருந்து அழைத்ததால், ஆகஸ்ட் 4 அன்று புதானாவில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போதான் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, ஆசிம் மற்றும் தாலிபின் மனைவி மீனா மீது, பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் 103 (கொலை) மற்றும் 61-2 (குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது புகாரில், தாலிபின் சகோதரர் அகில், மீனா தனது கணவரைக் கொல்ல சதி செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். புதானாவின் வட்ட அதிகாரி கஜேந்திர பால் சிங் கூறுகையில், ஆசிம் தலைமறைவாக இருந்தார், மேலும் அவர் மண்டாவடாவிலிருந்து லுஹாசனா கிராமத்தை நோக்கிப் பயணிக்கவிருந்தார் என்பதை ஞாயிற்றுக்கிழமை அன்று காவல்துறை அறிந்ததாக அவர் கூறினார். தகவலறிந்த போலீசார் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். போலீசாரைக் கண்டதும், ஆசிம் ஒரு கரும்புத் தோட்டத்தில் ஒளிந்துகொள்ள முயன்று, பின்னர் தப்பிக்கும் நோக்கத்தில் சீருடை அணிந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். காவல்துறையினர் தற்காப்புக்காக திருப்பிச் சுட்டதில், ஒரு குண்டு அவரது காலில் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் புதானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணையின்போது ஆசிம் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், கையில் இருந்த விவசாயக் கோடரியும், நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டதாகவும் காவல்துறை மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்