க்ரைம்

பட்டப்பகலில் ஒருவரை ஓட ஓட விரட்டி கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பல்..! வெளியான சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

Tamil Selvi Selvakumar

சென்னை அமைந்தகரையில் பட்டப்பகலில் நபர் ஒருவரை ஓட ஓட விரட்டி 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்த பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த 18ம் தேதி ஒருவரை  கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி கொலை செய்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்றும், இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் இருந்ததும் தெரியவந்தது.

இதனிடையே நேற்று ஆறுமுகத்தை கொலை செய்ததாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் செனாய் நகரை சேர்ந்த ரோஹித் ராஜ்,  சந்திரசேகர் ஆகிய இருவர் சரணடைந்தனர்.  இந்த நிலையில் ஆறுமுகம் ஓட ஓட வெட்டி கொலை செயய்யப்பட்ட பதறவைக்கும்  சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.