க்ரைம்

கனரக லாரியின் சிசிடிவி காட்சிகள் வைரல்...

பிரபல பைப் தயாரிக்கும் நிறுவனத்திற்கு 15 டன் இரும்பு ஏற்றி வந்த கனரக லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததால் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

சென்னை | ஆவடி அடுத்த திருநின்றவூர் அருகே திருத்தணியில் இருந்து, ஆவடி டியூப் புரொடக்ஷன் கம்பெனிக்கு 15 டன் சீல் காயில் ஏற்றிக்கொண்டு லாரி வந்து கொண்டிருந்த பொழுது ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது.

இந்த லாரியை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் முருகேசன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த சரக்கு லாரி திருநின்றவூர் அருகே சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் ஆவடி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் நாய் குறுக்கே வந்ததால் அதன் மீது மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் கீழே நிலை தடுமாறி விழுந்தார்.

அவர் மீது லாரி மோதாமல் இருக்க லாரி ஓட்டுநர் பிரேக் போட்ட போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மின் போஸ்ட் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின் சிசிடி காட்சிகள் தற்போது வெளியாகி தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த விபத்து.

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து போலீசார் ஜேசிபி இயந்திரங்கள் வைத்து சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது இந்த சம்பவம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் நெடுஞ்சாலையில் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.