க்ரைம்

பதைபதைக்க வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள்..!

Malaimurasu Seithigal TV

கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த  கார் நிலை தடுமாறி அடுத்தடுத்து நான்கு வாகனங்களின் மீது மோதும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

மலப்புரம் அருகே பாண்டிக்காடு குறுக்கு சாலையில் இருந்து அதிவேகமாக வந்த கார் நிலை தடுமாறி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் படுகாயமடைந்த ஐந்துக்கும் மேற்பட்டோரை மீட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

-நப்பசலையார்