நேற்று[மார்ச் 25] காலை ஆறு மணி முதல் ஏழு மணிவரை சைதாப்பேட்டை ,கிண்டி, திருவான்மியூர் ,போன்ற பல இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்களை சிங்கம் 3 பட கிளைமாக்ஸில் வருவது போல, விமான நிலையத்திற்கு சென்று அதிரடியாக கைது செய்த போலீசார்.
ஈரானை சேர்ந்த இந்த கொள்ளையர்களுக்கு, தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களும் அத்துப்படியாம்," எங்க கொள்ளையடிப்பது எப்படி தப்பிப்பது" என்பது இவர்கள் தெளிவாக பிளான் பண்ணி செய்வார்களாம் .
இதுபோல கடந்த ஆண்டு, ஓசூரில் 12 இடங்களிலும் ,ஜனவரி மாதம் தாம்பரம் பகுதியிலும் இவர்களின் கைவரிசையை காட்டியுள்ளனர் , இதில் சுதாரித்த தமிழ்நாடு காவல்துறை இது குறித்து, தனிப்படை அமைத்து விசாரித்து உள்ளனர் .
இந்த நிலையில் நேற்று காலை சைதாப்பேட்டையில், இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பற்றிய தகவல் கிடைத்ததும் காவல் ஆய்வாளர் பாண்டியன் விரைந்து செயல்பட்டு CCTV கேமரா காட்சிகளை ஆராய்ந்ததில், அந்த கொள்ளையர்கள் விமான நிலையத்தை நோக்கி சென்றதை அறிந்தார்.
மேலும் படிக்க: பெண்களுக்கு "எங்கே" முத்தம் கொடுத்தால் ரொம்ப பிடிக்கும்? ஒரு "ஆச்சர்ய" ரிப்போர்ட்!
இதனை அடுத்து விமான நிலயத்திற்கு சென்று, பார்த்த போது சந்தேகித்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்தனர், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அந்த குற்றவாளிகள் "உடைகளை மாற்றினாலும், காலில் அணிந்த ஷுக்களை மாற்றாததினால்" பிடிபட்டனர் .
பிடிபட்ட அந்த கொள்ளையர்கள், ஈரானை சேர்ந்த ஜாபர் மற்றும் நிஜம் என்பதும், கடந்த ஆண்டு ஓசூரில் கைவரிசை காட்டியதும் ,தாம்பரம் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டதும், இதே போன்று இவர்கள் தமிழகத்தில் பல இடங்களில் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது .
மேலும் படிக்க: தாய், தந்தையை கண்டுக்காம விட்டா.. என்னென்ன நடக்கும் தெரியுமா? அதிர வைக்கும் "அறிவியல்" உண்மைகள்!
இதனை அடுத்து இன்று திருடிய நகைகளை பற்றி விசாரித்த போது , அதை மறைத்து வைத்துள்ள இடத்திற்கு, ஜாபரை போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அப்போது திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த, துப்பாக்கியை பயன்படுத்தி ஜாபர் போலீசாரை தாக்கியுள்ளார். எனவே போலீசார் ஜாபரை என்கவுண்டர் செய்துள்ளனர்.
பல மாநிலங்களில் தேடப்பட்டுவரும் முக்கிய குற்றவாளிகளை, தமிழக காவல்துறை அவர்களின் துரித செயல்பாட்டினால் கைதுசெய்தது, மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்