வட சென்னை தண்டையார்பேட்டை வ உ சி நகர் பகுதியில் வசித்து வருபவர் பல்பும் என்கின்ற சூர்யா, இவர் வ உ சி நகர் மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அங்கு போதையில் வந்த பாபு என்பவர் சூர்யாவை வழிமறித்து போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சூர்யாவை தாக்கம் முற்பட்ட பொழுது சூர்யா கத்தி பிடிக்கவே சூர்யாவின் கையில் பலமான வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சூர்யா வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார். இதனை கவனித்த அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த கமாய் என்கின்ற கதிர்வேல், ரிச்சர்ட் மற்றும் பார்த்திபன் என்ற மூன்று ரவுடிகள் பாபுவை மடக்கி நிறுத்தி எதற்காக அவரை தாக்கினாய் என கேட்டுள்ளனர் அதற்கு “என்னையே மடக்குகிறீர்களா?” என போதையில் இருந்த பாபு கத்தியை கொண்டு இவர்கள் மூவரும் ரவுடி என தெரியாமல் தாக்க முயற்சி செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து பாபு வைத்திருந்த கத்தியை பிடுங்கி பாபுவை சரமாரியாக வெட்டியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க எண்ணி பாபு ஓடியுள்ளார் இருப்பினும் விடாது துரத்திய ரவுடிகள் பாபு ஓட ஓட மூவரும் தாக்கிக் கொண்டே சென்ற நிலையில் ஒரு கட்டத்தில் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாபு சுருண்டு கீழே விழுந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சுருண்டு விழுந்த பாபு அப்படியே விட்டுவிட்டு மூவரும் தப்பி ஓடிய நிலையில் அங்கு இருந்தவர்கள் நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாபுவை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாபுவை வெட்டி விட்டு தப்பி ஓடிய மூன்று ரவுடிகளையும் துரத்திப் பிடித்து கைது செய்துள்ளனர். நடுரோட்டில் போதை ஆசாமி துரத்தி துரத்தி வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.