சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் 32 வயதுடைய மேனகா( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் மேனாக தனியாக வசித்து வந்திருக்கிறார். இவர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. எனவே மேனகா மீது ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இருப்பினும் தொடர்ந்து மேனகா மது விற்பனையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
அவரது குற்றங்களை கண்டு கொள்ளாமல் இருக்க மாதந்தோறும் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு காவலராக பணியாற்றி வரும் சூர்யா என்பவருடன் மேனகாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சூர்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு மேனகா வீட்டிற்கு சோதனைக்கு சென்றபோது அவர் தன் மீது உள்ள மூன்று வழக்குகளை ரத்து செய்யுமாறு காவலர் சூர்யாவிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். இதனையடுத்து வழக்குகளை ரத்து செய்வதாக உறுதியளித்த சூர்யா அப்பகுதியில் சென்றிருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் மேனகா வீட்டிற்கு சென்ற காவலர் சூர்யா பழைய வழக்குகள் குறித்து விசாரிக்க வேண்டும் என அவரது வீட்டிற்குள் சென்றிருக்கிறார். பின்னர் தொடர்ந்து விசாரித்த நிலையில் ஒரு கட்டத்தில் மேனகாவை அறைக்குள் அழைத்து சென்று ஆடைகளை அகற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தண்ணீர் எடுத்து வருவதாக கூறி சூர்யாவை அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குடிபோதையில் படுக்கைறையில் இருந்த சூர்யாவை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதனை தொடர்ந்து மேனகா தனது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து சூர்யா மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற மாதர் சங்கத்தினருடன் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவலறிந்த போலீஸ் கமிஷனர் அருண் கணவன் இல்லாமல் தனியாக வசித்து வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சூர்யா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்துள்ளார். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறையில் இருந்து கொண்டே சூர்யா பெண்ணிடம் அத்துமீறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.