க்ரைம்

“வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து” - பின் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்த வாலிபர்.. இணங்க மறுத்ததால் வெறிச்செயல்!

மறைத்து கொண்டு சென்ற கத்தியை எடுத்து மாணவியின் கழுத்து மற்றும் முதுகு பகுதியில் சரமாரியாக குத்தி விட்டு...

Mahalakshmi Somasundaram

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீழமூங்கிலடி கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் சி.முட்லூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தந்தையை இழந்த நிலையில் தாயுடன் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. தனனுமும் சிறுமி பள்ளிக்கு செல்லும் போதும் வரும் போதும் அவரை பார்த்த அதே பகுதியை சேர்ந்த வாலிபர் 27 வயதுடைய ஐயப்பன் சிறுமியை பின் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவரது தாயார் வழக்கம் போல வேலைக்காக சிதம்பரத்திற்கு சென்றிருந்த நிலையில், நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டில் சிறுமி தனியாக இருந்துள்ளார்.

அந்த நேரத்தை நோட்டமிட்ட அ ஐயப்பன் நேரடியாக சிறுமியின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. வீட்டுக்குள் நுழைந்த ஐயப்பன், சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு ,மீண்டும் வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், முன்கூட்டியே மறைத்து கொண்டு சென்ற கத்தியை எடுத்து மாணவியின் கழுத்து மற்றும் முதுகு பகுதியில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பலத்த காயமடைந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு, அண்ணாமலைநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் குறித்து தகவலறிந்த சிதம்பரம் தாலுகா காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று மாணவியிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவம் நடந்த வீட்டிலும் ஆய்வு மேற்கொண்டு முக்கிய தடயங்களை சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில், காதலை ஏற்க மறுத்ததால் இந்த தாக்குதல் நடித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும், இதற்கு வேறு ஏதேனும் பின்னணி காரணங்கள் உள்ளதா எனவும் பல்வேறு கோணங்களில் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில், தாக்குதலை நடத்திவிட்டு தப்பி ஓடிய ஐயப்பனை மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக இருந்த 15 வயது பள்ளி மாணவியை காதல் ஏற்க மறுத்ததால் வீட்டுக்குள் புகுந்து கத்தியால் குத்திய இந்த சம்பவம், சிதம்பரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.