விழுப்புரம் மாவட்டம், சின்ன செவலை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் இவர் அதே பகுதியை சேர்ந்த ரேணுகா என்ற பெண்ணை காதலித்து அந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் ஒருவர் கல்லூரி முதலாமாண்டும், மற்றொருவர் பள்ளியில் 11 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இதற்கிடையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவிந்தனுக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது.
எனவே அவர் சென்னையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனைவி மீது சந்தேகப்பட்டு அவரிடம் வாக்குவாதம் செய்து வந்திருக்கிறார். மேலும் எப்போது ரேணுகா வேறு யாருடனாவது போனில் பேசி வருவதாக குற்றச்சாட்டு வந்திருக்கிறார். பின்னர் உடல்நலம் குமணமாகி வீட்டிற்கு வந்த கோவிந்தன் மனைவி ரேணுகா வேறு ஆணுடன் தொடர்பில் இருப்பதாக நினைத்து அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த அவர்களது உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கோவிந்தன் வேலைக்காக இரண்டு மாதங்கள் வெளியூருக்கு சென்ற நிலையில் மீண்டும் மனைவி மீது சந்தேகப்பட தொடங்கியிருக்கிறார். பின்னர் மீண்டும் மனைவியிடம் இது குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த சூழலில் இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த கோவிந்தன் மற்றும் ரேணுகாவிற்கு இடையே திருமணத்திற்கு மீறிய விவகாரம் பற்றிய சந்தேகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக முற்றியுள்ளது. இதனை அக்கம் பக்கத்தினர் தடுக்க முயற்சித்துள்ளனர்.
இருப்பினும் ஆத்திரம் அடங்காத கணவன் கோவிந்தன் வீட்டிற்குள் இருந்த கல்லை எடுத்து வந்து மனைவியின் தலை மீது போட்டு கொலை செய்திருக்கிறார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கோவிந்தனை பிடித்து போலீசாருக்கு தகவளித்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரேணுகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கோவிந்தம் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கணவனே மனைவியை சந்தேகத்தால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.