Chris Watts wife murder 
க்ரைம்

"கள்ளகாதலிக்காக கர்ப்பிணி மனைவி, 2 குழந்தைகளை கொன்ற கணவன்!" சிறையில் வேறொருவருடன் காதல்.. விரைவில் திருமணமா?

ஹென்டர்சன், 2025-ம் ஆண்டில் வாட்ஸை 20 முறை சந்தித்ததாகவும், 2024-ம் ஆண்டில் அவருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது.

Vinvizhi Leninton

2018-ல் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்ற கிரிஸ் வாட்ஸ், சிறையில் தனக்குக் கிடைத்த காதலி ஒருவரை மறுமணம் செய்ய உள்ளதாக மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

41 வயதான வாட்ஸ், லிஸ்ஸி ஹென்டர்சன் என்ற ஓஹியோ ரியல் எஸ்டேட் முகவருடன் தற்போது காதல் உறவில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. லிஸ்ஸி அவர்களது உறவை உறுதிப்படுத்திய போதிலும், இன்னும் பல தகவல்கள் வெளியே வராமலேயே உள்ளது. லிஸ்ஸி தண்டனை பெற்றுவரும் கொலையாளியின் குடும்பப் பெயரை ஏற்று, தன்னுடைய பெயரை லிஸ்ஸி வாட்ஸ் என மாற்றுவதற்கு அவர் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்குள்ளான உறவைப் பற்றிய விவரங்கள் குறைவாக இருந்தாலும், 39 வயதான ஹென்டர்சன், 2025-ம் ஆண்டில் வாட்ஸை 20 முறை சந்தித்ததாகவும், 2024-ம் ஆண்டில் அவருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது.

வாட்ஸ் இதற்கு முன்பு, தனது 34 வயதான கர்ப்பிணி மனைவி ஷனான் மற்றும் அவர்களது மகள்களான 4 வயதான பெல்லா, 3 வயதான செலஸ்டே ஆகியோரைக் கொலை செய்ததற்காக, வாட்ஸ் தற்போது பரோல் வாய்ப்பின்றி மூன்று தொடர்ச்சியான ஆயுள் தண்டனைகளுடன் கூடுதலாக 84 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த கொலை வழக்கில் வாட்ஸ், ஷனானை எண்ணெய் சேமிப்புத் தளத்திற்கு அருகில் ஒரு ஆழமற்ற குழியில் புதைத்துவிட்டு, அவரது குழந்தைகளின் உடல்களைக் கச்சா எண்ணெய் தொட்டிகளுக்குள் வீசியதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த கொலையை அவர் ஏன் செய்தார்? என்பது குறித்து வாட்ஸிடம் கேட்டபோது அவர், திருமணத்திற்கு மீறிய உறவில் சக ஊழியருடன் இருந்துள்ளார். அதனால், அவருடன் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக அந்தப் பயங்கரமான செயல்களைச் செய்ததாக அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், அவர் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த பெண் ஒருவர், 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் வாட்ஸுடன் தனக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், வாட்ஸ் அவரது குடும்பத்தைக் கொல்வதற்கு முந்தைய மாதங்களில் அவரது நடத்தை விசித்திரமாகவும், பயமுறுத்தும் விதத்திலும் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஷனான் வாட்ஸுடன் (மனைவி) அவருக்கு குழந்தை வளர்ப்பு குறித்து நீண்ட காலமாக சில தகராறுகள் இருந்து வந்ததாகவும் அதனை வாட்ஸ் தன்னை நம்ப வைத்ததாக அவரது கள்ளக்காதலி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும், "ஷனான் தன்னுடைய குழந்தைகளின் தாய் மட்டுமே தவிர்த்து, தனக்கு மனைவி அல்ல" என்றும் அவர் அவரது கள்ளகாதலியிடம் கூறியுள்ளார்.

மேலும், வாட்ஸ் மனைவி ஷனானிடமிருந்து தான் பிரிந்துவிட்டதாகவும், ஷனான் குழந்தைகளைத் தனக்கு எதிராகப் பயன்படுத்துவதாகவும் வாட்ஸ் அவரது கள்ளகாதலியிடம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், வாட்ஸ் தனது கள்ளக்காதலியை சந்திக்க அவரது வீட்டிற்குத் தனித்தனியாக காரில் சென்றுள்ளார். பின்னர் அவரோடு உடலுறவில் இருந்தபோது வாட்ஸ் "பயமுறுத்தும் வகையில் முரட்டுத்தனமாக" நடந்துகொண்டதாகவும், தனது முடியைப் பிடித்து இழுத்து, கழுத்தைச் சுற்றித் தன் கைகளை இறுக்கியதாகவும் அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். மேலும், 2018-ல் இதுகுறித்து அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் பிரிந்த நிலையில், தற்போது வாட்ஸ் சிறையில் உள்ளார். அவர் சிறையில் உள்ள ஒருவருடன் காதல்வயப்பட்டதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்