கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கழிக்க நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவருடைய மகன் தனுஷ் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டு அதே பகுதியில் உள்ள கோழி கறிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தனுஷுக்கும் அதே பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது, பின்னர் இருவரும் சேர்ந்து அதிக நேரம் போனில் பேசுவது வெளியில் செல்வது என காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த மாணவி ஓணம் பண்டிகை கொண்டாட தனது சொந்த ஊரான கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி பகுதிக்கு சென்றார். ஓணம் பண்டிகையை கொண்டாடி விட்டு மாணவி தனது நண்பர்களுடன் அங்குள்ள ஒரு ஆற்றங்கரை பகுதிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது நீரில் மூழ்கி மாணவி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. தினம்தோறும் தனுஷுக்கும் போன் செய்து பேசும் அந்த மாணவி இரண்டு நாட்களாக போன் செய்யாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த தனுஷ் மாணவியின் செல்போன் எண்ணிற்கு போன் செய்துள்ளார்.
அப்போது மாணவியின் உறவினர் ஒருவர் மூலம் தனுஷ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செய்தியை அறிந்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தனுஷ் “ அவ தானே எனக்கு எல்லாமே அவ இல்லாத, உலகில் நான் எப்படி ? வாழ முடியும்” என்று நண்பர்களிடம் அழுது புலம்பினார். தனுஷை சமாதானம் செய்த நண்பர்கள் அவரை ஆறுதல் படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் காதலி உயிரிழந்ததை தங்க முடியாத தனுஷ் வீட்டிற்கு செல்லும் வழியில் விஷம் வாங்கி குடித்து விட்டு வீட்டிற்கு சென்றார்.
தனது வீட்டிற்கு சென்ற தனுஷ் திடீரென வாந்தி எடுத்து உள்ளார். தனுஷ் வாந்தி எடுத்ததை பார்த்த அவரது பெற்றோர்கள் தனுஷிடம் விசாரித்த போது “தனது காதலி இல்லாத உலகில் தன்னால் வாழ முடியாது” எனவே விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனுஷை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தொண்டாமுத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காதலி இறந்த வருத்தத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.