அஜித் குமார் காவல் மரணம் மறைவதற்குள் கச்சிராயபாளையம் காவல்நிலையத்தில் காவல்நிலையம் உள்ளேயே கடந்த மாதம் போலீசார் ஒரு இளைஞரை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்துள்ள ஏர்வாய்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரை துபாய் நாட்டில் வேலை உள்ளதாகவும் அதிக சம்பளம் வாங்கி தருவதாக சுற்றுலா விசாவில் அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் விஜய் என்பவர் கடந்த 2024ஆண்டு துபாய்க்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். பணிக்கு சென்ற ஓரே மாதத்தில் கவலை கிடமான நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் தமிழகம் திரும்பியுள்ளார் ஜெயபால். இதுகுறித்து அவரது மனைவியான மலருக்கு தகவல் தெரிவித்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 3 நாட்களில் உயிரிழந்தார் ஜெயபால்.
இந்நிலையில் இதுகுறித்து தனது கணவரை வெளிநாட்டிற்கு அனுப்பிய விஜய் என்பவரை பார்த்து என்ன நடந்தது என கேட்டுள்ளார். நீ எதாவது இப்படி வந்து என்னிடம் எதாவது கேள்வி கேட்டால் உனது கணவருக்கு நடந்தது தான் உனக்கும்.. உங்களை குடும்பத்தோடு கொன்று விடுவேன்! என விஜய் மற்றும் அவரது சித்தப்பா ஆகியோர் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது, இதுகுறித்து மலர் கச்சராபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஓரிரு மாதங்கள் கடந்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நீதிமன்றம் சென்று எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும் என ஜெயபால் குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்து இருந்தனர். நீதிமன்றமும் எஃப் ஐ ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது,
இருப்பினும் எஃப் ஐ ஆர் பதிவு செய்ததுடன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த நிலையில் மலரின் அக்கா மகனான விக்கி தனது சித்தப்பாவின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கச்சராபாளையம் காவல் நிலையத்திற்க்கு சென்று நேரடியாக ஆய்வாளரிடம் கேட்டதாக கூறப்படுகிறது, இதற்கு போலீசார் தரப்பில் கடும் கோபம் கொள்ளவே இரவு நேரம் என்று கூட பார்க்காமல் காவல் நிலையத்தின் வெளியில் இருந்து விக்கியை அடித்து உள்ளே இழுத்துச் சென்று கும்பலாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இந்த சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்போது அஜித்குமார் என்பவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல் மரணம் அடைந்த நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் கச்சராபாளையம் காவல் நிலையத்தில் அரங்கேறி உள்ளது உடனடியாக தாக்குதலில் ஈடுபட்ட கச்சராபாளையம் காவல்துறையினர் மற்றும் எந்த நடவடிக்கும் எடுக்காமல் கண்டு கொள்ளாமல் இருந்த எஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை எழுந்துள்ளது....
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.